நிறுவனர்
ஸ்ரீமத் சகத்குரு அறுபத்துமூன்று நாயன்மார்கள் மடாலயம்
ஸ்ரீ கணபதியானந்த தேசிகர் ஆச்சிரமம்
காரைக்காலம்மையார் பெண்கள் வைதீக வித்தியாலயம்.
விருதுநகர்

ஓம் பரம குருவே நமஹ
சத்குரு கு.ப.குருசாமி ஐயா
ஜனனம் : 18.04.1877
விதேக கைவல்யம் : 24.06.1944
ஸ்ரீ கு.ப.குருசுவாமி அய்யாவின் வாழ்க்கை வரலாறு
பரத கண்டத்தில் பாண்டிவள நாட்டில் விருதையம்பதி என்னும் க்ஷேத்திரத்தில் க்ஷத்திரிய
சான்றோர் குலத்தில் குலவீரம் என்ற மரபில் பழனி நாடார், காமாக்ஷி அம்மாள் என்ற இருவர்கள் புத்திரப்பேரில்லாது செய்த தவப் புண்ணியத்தால் ஈஸ்வர வருஷம்
சித்திரை மாதம் 7-ம் தேதியில் ஒரு ஆண் மகவை ஈன்று அதற்கு
குருசாமி என்ற நாமதேயஞ் சூட்டி, அன்போடு வளர்த்து ஐந்து
வயதில் பள்ளிக்கனுப்பி தமிழ்க் கல்வியில் அவாவோடு பயின்று
வருங்கால் ஈஸ்வர பக்தி சான்றோர் சேர்க்கையுடன் பதினாறாவது
வயதில் காமக் குரோதாதி குணங்களை விடுத்து சரீரம் அநித்தியம்
என்ற நிச்சயம் உண்டாகி சாஸ்திர ஆராய்ச்சியில் முயன்று வருங்காலம்
தாபாக்னி மேலிட்டு சரீரத்தில் அக்னி பற்றிக்கொண்டவன்
எப்படி மடுவைத்தேடி அலைவானோ அதைப்போல் சற்குருவின்
கடாக்ஷமின்றி, சர்வ துக்க நிவர்த்தி பரமானந்த பிராப்தி என்னும்
மோக்ஷத்தை அடைய முடியாது என்ற நிச்சயத்தால் சற்குருவைத்
தேடி அலைந்து ஸ்ரீ நாகலாதபுரம் என்னும் க்ஷேத்திரத்தில்
எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கணபதியானந்த தேசிகரது திருவடித்
தாமரையில் சாஷ்டாங்கமாக விழுந்து, “ஐயனே! அடியேன் பிறவி
என்னும் துன்ப சாகரத்தில் உழன்று உழன்று அலுத்துத் தங்கள்
திருவடித் தாமரையை அடைந்தேன்” என்று கண்ணீரும் கம்மலையுமாக
நிற்க, மேற்படி சற்குருநாதன் இவன் ‘மோக்ஷம் என்னும் பெரும்
பேற்றை அடைய அருகதையுடையவன்’ என்று எண்ணி அஞ்சலியஸ்தராய்
சீவப்பிரம ஐக்கியத்தை உபதேசித்து, இதன்படி அனுஷ்டானம் பண்ணி வருவாயானால்
உனது பிறவி என்னும் துன்பம்நீங்கி துக்கநிவர்த்தி பரமானந்த பிராப்தி ஆகிய மோக்ஷத்தை
அடைவாய் என்று அனுக்ரகம் பண்ணி வைத்தார்.

அதன்படியே குருசாமி ஐயா அனுஷ்டித்துக்கொண்டும்,
ஆப்தம், அங்கம், தானம், சத்பாவம் என்னும் சற்குரு பணிவிடை
முறை வழுவாது செய்து வருங்காலம், அவருடைய தாயாராகிய
காமாஷி அம்மாள் சற்குருவினிடத்தில்போய் எனக்கு ஏகபுத்திரன்
தான் இருக்கிறான் என்றும், என்னுடைய பரம்பரை விருத்தியாக
வேண்டுமென்றும் வணங்கிக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர்
தன்னுடைய மாணாக்கனாகிய குருசாமியை அழைப்பித்து “அப்பா
உன்னுடைய தாயார் சொற்படி கல்யாணம் செய்து இல்லற நெறி
வழுவாது நடத்தி வருவாய்” என்று திருவாய்மலர்ந்தருளினார்.
குருநாதனுடைய சொல் கடக்க முடியாதவராய் வினையின் வசப்பட்டு
தன்னுடைய மாமனார் அய்யம்பெருமாள் நாடார் மகள்
உமையம்மாளை கல்யாணம் செய்து இல்லறம் நடத்திவருங்காலம் சற்குரு
நாதனுடைய அனுக்ரகம் பண்ணிய பரமானந்த அனுகஷ்டான அனுபூதியில்
மனம் வழுவாது இன்னும் சில மாணாக்கர்களுடன் சாஸ்திர
விசாரணையும் நடத்திக்கொண்டு வந்தார்.
அப்படி நடந்துவருங்காலம் தன்னுடைய வாழ்க்கை ஸ்தலமாகிய
விருதுநகரில் அடியார்களாகிய சிவநேசச்செல்வர்கள் வந்தால்
தங்குவதற்கு இடவசதி இல்லாததாலும், குருலிங்க சங்கம பக்தி
செய்வதற்கு வேண்டிய இடவசதியில்லாததாலும் அதற்கு ஒரு
இடத்தை ஸ்தாபிக்கவேண்டுமென்றுநினைத்து தன்னுடைய மாமனார்
ப.மு.சங்கரலிங்க நாடாருடைய ஒத்தாசையாலும் தன்னுடைய
பெரு முயற்சியாலும், உறவின்முறை நாடார்கள் ஒத்தாசையாலும்
‘ஸ்ரீமத் ஜெகத்குரு அறுபத்துமூன்று நாயன்மார்கள் திருமடாலயம்’
ஸ்தாபிப்பதற்கு தனது குருநாதன் கணபதியானந்த தேசிகரது
திருக்கரத்தால் முளைப் பிடிக்கச் செய்து அவருடைய அனுக்கிரகத்தால்
மேற்படி மடாலயக் கட்டிடம் முடித்து சாதாரண-வருடம், தை-மாதம்
26-தேதி யில் குருநாதன் கணபதியானந்த தேசிகரும், முத்தாநந்த
சுவாமிகள், மொட்டையா மடம் செல்லப்ப சுவாமிகள்,
உமரிக்கோட்டை சுவாமிகள், அண்ணாமலை சுவாமிகள், தஞ்சாவூர் பிரம்ம
ஸ்ரீ குப்புசாமி ராஜ் மற்றும் பிரபல அடியார்கள் புடைசூழ திறப்பு
விழாவாகிய கும்பாபிக்ஷேகம் நடத்தியும், மேற்படி மடாலயத்தில்
கணபதியாகிய விநாயகர் விக்ரகமும், காசிவிஸ்வேஸ்வரராகிய லிங்கப்
பிரதிஷ்டையும், ஞானதண்டாயுதபாணி பிரதிஷ்டையும், நந்தியும்,
பெருமான் பிரதிஷ்டையும், ஸ்ரீ ஜெகத்குரு சங்கராச்சாரியின் படப்
பிரதிஷ்டையும், அறுபத்துமூன்று நாயன்மார்கள் படப் பிரதிகஷ்டையும்,
மாணிக்கவாசகப் பெருமானின் படப் பிரதிஷ்டையும்,
கணபதியானந்த தேசிகர் படப் பிரதிஷ்டையும், செய்து வைத்து
உடல், பொருள், ஆவி மூன்றையும் மடத்திற்கே அர்ப்பணம்பண்ணியும்,
கணபதியானந்த தேசிகர் பேரால் வாசக சாலையும், ஸ்ரீ
காரைக்காலம்மையார் பேரால் பெண் கல்வி வித்தியாலயமும்
ஸ்தாபித்து வைத்து என் கடன் அடியார்கள் பணிவிடையும், ஈஸ்வர
பக்தியும், மடாலயத் திருப்பணியும் என்று நினைந்து நினைந்து
அவருடைய வாழ்நாள் முழுவதும் கழித்து வந்தார்.
_HEIC.png)


இவ்விதம் குடும்பத்தில் சேற்றினிடத்தில் உள்ள பிள்ளைப் பூச்சி
போலும், புளியம்பழமும் தோடும் போலும் வாழ்ந்துவருங்காலத்தில்
வினைவசத்தால் சிற்சிலகுழந்தைகள் தோன்றித் தோன்றி
மறைந்தன. அதில் திருநாவுக்கரசி என்னும் ஒரு பெண் குழந்தை
மாத்திரம் நிலைத்திருந்தது. அங்ஙனமிருக்கையில் தெய்வ சங்கற்பத்தால்
சம்சாரமாகிய உமையம்மாள் தேகவிபோகம் ஆகிவிட்டது.
அதிலிருந்து தன்னுடைய வினை ஒழிந்து பந்தபாசம் நீங்கிவிட்ட
தென்று சந்தோக்ஷமாக குருநாதனிடத்தில் போய், “சுவாமி! நான்
சந்நியாச ஆச்ரமத்துக்கு அருகதையுடையவனாயிருக்கிறேன்” என
வணங்கிக் கேட்க, குருநாதன் “உன்னுடைய சந்ததி விருத்திக்கு
ஆண்மகவு இல்லாததால் உனது தாயார் மனம்போல் மறு விவாகம்
செய்து இல்லற தர்மம் நடத்தி வருவாய்” என்று கட்டளையிட்டார்.
அவர் வார்த்தையைக் கடக்க முடியாதவராய் மேற்படி விருதையம்பதியில்
வாழும் சங்கரலிங்க நாடார் புத்திரி குருவம்மாள் என்ற
_HEIC.png)
_HEIC.png)
_HEIC.png)
பெண்ணை திருமணம் செய்து இல்லற தர்மம் நடத்திவருங்காலம்
வினைவசத்தால் சிற்சில குழந்தைகள் தோன்றி மறைந்தன. ஆனாலும்
குடும்ப பாரம் துக்கம் என்று நினைத்து சதா பிரமநிகஷ்டையும்,
சாஸ்திர விசாரணையுமே பிரதானமாக நடத்திவந்தார். அந்நாளில்
மூத்த தாரத்தின் மகளாகிய திருநாவுக்கரசி கன்னிப் பருவம் நீங்கி
மங்கைப் பிராயமாகி அதற்கு கல்யாணம் முதலிய சுபசோபனங்கள்
நடத்தவேண்டுமென்ற அவாவுடன் அதற்கேற்ற வரன் தன்னுடைய
மாமனார் மகன் ராமலிங்கமே தகுந்த உத்தம புருக்ஷன் என்று
நினைத்து உறவினர்களுடன் கலந்து மேற்படி மாப்பிள்ளைக்கே
கன்னிகாதானம் செய்து வைத்தார். அதுவும் சிலகாலம் வாழ்ந்து
சில மகப்பேறுகள் பெற்று விதிவசத்தால் அதனுடைய சரீரமும் நழுவியது.
பின்னால் தன்னுடைய தாயார் காமாஷி அம்மாளும் வயோதிகப்
பருவமாகி அதனுடைய சரீரமும் நழுவ, அதற்கு வேண்டிய
ஈமக் கடன்கள் எல்லாம் முடித்து வாழ்ந்து வந்தார்கள்.
இங்ஙனமிருக்கையில் தன்னுடைய மனைவி குருவம்மாள்
புத்திரப்பேறு இல்லாத கவலையினால் மனவருத்தமுற்று இருக்கவே,
அதனுடைய மனது சாந்தியடைய வேண்டும் என்று நினைத்து
தில்லைச் க்ஷேத்திரமாகிய சிதம்பரத்தில் போய் வசித்துவந்தார்கள்.
அக்காலத்தில் நாடார் சமூகத்தார்கள் வந்தால் இறங்குவதற்கு
இடவசதி இல்லையென்று நினைத்து அங்கும் மடம் ஒன்று
பெருமுயற்சியால் ஏற்படுத்தி வைத்தார். அதன்பிறகு இருவரும் விருதுநகர்
வந்து வாழந்துவர, தவப்பயனால் ஒரு ஆண் மகவை அடைந்து
அதற்கு நாகரத்தினம் என்று திருப்பெயர் சூட்டி வாழ்ந்து வரும்
காலத்தில், அநேக மாணாக்கர்களுக்கும், அநேக மாணவிகளுக்கும்
சாஸ்திரங்களைப் புகட்டியும், தத்துவவிசாரணைசெய்தும் வருங்காலம்
பிரார்த்தவம் முடிந்து அஞ்ஞானத்திலுள்ள ஆவரண விச்சேப
சக்திகளின் ஆவரண சக்தியும் சஞ்சிதமும் சற்குரு கடாக்ஷத்தால்
உபதேசம் பெற்ற அன்றே நிவர்த்தியாய்விட்டபடியால் விச்சேப
சக்தியிலுள்ள பிரார்த்தவகர்மம் வருத்த விதையைப்போல் வர்த்தமான
தேகத்தில் இருந்தபடியால் அந்தப் பிரார்த்தவகர்மம் போகத்தால்
நசித்தபிறகு ஸ்தூல சுக்ஷ்ம சரீராகாரமாக பரிநாமத்தையடைந்த
அஞ்ஞானம் சேதனத்தில் ஒடுங்கியதால் விதேக கைவல்ய
மோக்ஷத்தை தாரண-வருடம் ஆனி-மாதம் 11-தேதி சனிக்கிழமை
ஆயில்ய நக்க்ஷத்திரத்தில் அடைந்து விருதையம்பதியில்
திருக்கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார்.
விருதுநகர் 24-06-1944
இங்ஙனம், மாணாக்கன் மு.சு.சிதம்பரம்.
_HEIC.png)
